Veerakula Amaran Iyakkam
Wednesday, December 28, 2011
Saturday, December 3, 2011
Saturday, September 17, 2011
கொள்கைகள்
- இயக்க கொள்கைகள்
- அகமுடையோருக்கான இட ஒதிக்கீடு,
- கட்டாயக்கல்வி விழிப்புணர்வு,
- அரசியலில் அங்கீகாரம் வகிப்பது,
- தொழில் முனைவோராகுவதற்க்கான தளம் அமைத்தல்,
- கிராமப்புற இளைஞர்களை மேன்மைப்படுத்துவது,
- சட்ட விழிப்புணர்வு மையம் அமைத்தல்,
- தமிழரின் வீர விளையாட்டுகள் மேம்பட மையம் அமைத்தல்,
- நம் இன இளைஞர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு தளத்தை உருவாக்குதல்.
1 அகமுடையோருக்கான இட ஒதிக்கீடு :அகமுடையோருக்கான இட ஒதிக்கீடு கோரி இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசிடம் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற வழிமுறைகளில் போராடுவோம் .
2 கட்டாயக்கல்வி விழிப்புணர்வு:கல்வி இன்று வியாபார நோக்கமாக உள்ளது. ஆகையால், நமது சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பலானோர் அடித்தட்டு மக்களாய் இருக்கின்ற காரணத்தால் போதிய கல்வி கிடைக்காமல் நம் சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளது. ஆகையால் ,நம் இனத்தின் கல்வியறிவை மேம்படுத்த தேவையான விழிப்புணர்வை கல்வியின் அவசியத்தை அவர்கள் உணரும்படியாக கிராமப்புற மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள் மற்றும் தொடர்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முயற்சி செய்தல். மேல்நிலை மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான உதவிகளையும் செய்வோம்.
3 அரசியலில் அங்கீகாரம் வகிப்பது:சுதந்திர இந்தியாவில் இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் கிட்டத்தட்ட 1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அகமுடையோருக்கான அரசியல் அங்கீகாரத்தை எந்த ஒரு அரசியல் அமைப்புகளும் நமக்கான எந்தஒரு உரிமையும் இதுவரை அளிக்காததால் நமக்கான அரசியலை போரடிப்பெற்று அதனால் நமது சமுக முன்னேற்றத்திற்க்கான பாதையை அமைத்து கொள்வது.
4 தொழில் முனைவோராகுவதற்க்கான தளம் அமைத்தல்சுய வேலைவாய்ப்புகள் மற்றும் சிறுதொழில் விழிப்புணர்வு மையம் அமைத்தல், அவரவர் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்றுத்தர தேவையான முயற்சிகளை செய்தல்.
5 கிராமப்புற இளைஞர்களை மேன்மைப்படுத்துவது:கிராமப்புற மக்களின் விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு அவர்களின் உரிமையப்பெற அறிவுறுத்துவது, இளைய தலைமுறைக்கு விவசாயத்தின் அவசியத்தையும், அதன் அழிவின் காரணத்தையும் எடுத்துரைப்பது மற்றும் இதைச் சார்ந்த எல்லா பணிகளுக்கும் துணை நிற்பது , சுற்றுப்புற சூழலை பாதுகாக்க, சுகாதரமுள்ள வாழ்க்கை வாழ அறிவுறுத்துவது.
6 சட்ட விழிப்புணர்வு மையம் அமைத்தல்தீண்டாமைச் சட்டத்தில் பாதிக்கப்படும் இளைஞர்கள் சட்ட அறிவு விளக்கம் பெற,
மண வாழ்க்கை பிரச்சனைகளில் சுமுக தீர்வு பெற, மண வாழ்க்கை பிரச்சனைகள் பெண்களுக்கான உரிமைகள் வரதச்சனைப் பிரச்சனைகள், தொழிலாளர் தகராறுகளில் நிவாரணம் பெற நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் , சட்ட வல்லுனர்களையும் கொண்டு சட்ட விழிப்புணர்வு முகாம் அமைத்தல்.
7 தமிழரின் வீர விளையாட்டுகள் மேம்பட மையம் அமைத்தல்தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல்(ஜல்லிக்கட்டு ), சிலம்பாட்டம் ,
கபாடி இது போன்ற இன்னும் பல தமிழர்களின் வீரத்தை அடையாளப்படுத்தும் விளையாட்டுகளைபாதுகாக்கவும் மற்றும் நடத்தவும் தொடர்ந்து முயற்சி செய்வது.
8 நம் இன இளைஞர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு தளத்தை உருவாக்குதல்:இலக்கியம், நாடகம், இசை, கவிதை போன்ற கலைப்பண்பட்டு தளத்தில் இயங்கும் நமது இன மக்களின் திறமைகளை மேலும் ஊக்கப்படுத்தி புதிய தலைமுறையை உருவாக்கவும் நமது இனப் பெரியோர்கள் மொழி, கலைப் பண்பாட்டு தளத்தில் செயலாற்றி
மறைந்த பெரியோர்களின் சேவையை பாராட்டும் விதமாக அவர்களின் புகழை பரப்பும் விதமாக அவர்களின் திருவுருவப்படங்களும், நினைவுப் பரிசுகளும், நினைவுப் புத்தகங்களும் வழங்கி செயலாற்றுகிறோம். - அகமுடையோருக்கான இட ஒதிக்கீடு,
Subscribe to:
Posts (Atom)